பின்வரும் தேர்வு செய்யப்பட அதிகாரிகள் தமிழ் சமூக மைய திட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளார்கள்

நகரமுதல்வர் ஜோன் டோரி

தொறொன்ரோ நகர்

“எமது நகரிலே தமிழ் கனேடியர்களுக்கென ஒரு சமூக மையம் அமையப்போகும் சாத்தியத்தை எண்ணி நான் மிகுந்த மிகிழ்ச்சியடைவதோடு நம்பிக்கையும் கொண்டுள்ளேன். தமிழர்கள் ஒன்றுகூடுவதற்கும் அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்குமான இந்த நிலையத்தை உருவாக்க குமுகத்தின் தலைமையுடன் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். பெருந்தொகையான தமிழர்களுக்கு வாழ்விடமாக விளங்கும் தொறொன்ரோவிலே இத்தகையதொரு மையம் அமைவது அவர்கள் எமது நகரிலே முன்னேறவும் வளமுறவும் வாய்பளிப்பதாக அமையும்”

நகரசபை உறுப்பினர் போல் ஏய்ன்ஸ்லி

24ம் வட்டாரம் ஸ்காபரோ-கில்வூட்

“எமது நகரிலே தமிழ் கனேடியர்களுக்கென ஒரு சமூக மையம் அமையப்போகும் சாத்தியத்தை எண்ணி நான் மிகுந்த மிகிழ்ச்சியடைவதோடு நம்பிக்கையும் கொண்டுள்ளேன். தமிழர்கள் ஒன்றுகூடுவதற்கும் அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்குமான இந்த நிலையத்தை உருவாக்க குமுகத்தின் தலைமையுடன் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். பெருந்தொகையான தமிழர்களுக்கு வாழ்விடமாக விளங்கும் தொறொன்ரோவிலே இத்தகையதொரு மையம் அமைவது அவர்கள் எமது நகரிலே முன்னேறவும் வளமுறவும் வாய்பளிப்பதாக அமையும்”

நகரசபை உறுப்பினர் கரி குரோஃபோர்ட்

20ம் வட்டாரம் ஸ்காபரோ தென்மேற்கு

“தமிழ் சமூக நிலையமொன்று பலநாளைய தேவையாக இருந்துவருகிறது. றோரன்றோவின் தமிழ்க் குமுகத்தால் இதைக் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டிருப்பதைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. பல தமிழர்கள் வாழும் ஸ்காபரோ வட்டாரமொன்றை நகரசபையிலே பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் என்ற முறையிலே நான் உங்களுடன் இணைந்து இந்தச் செயற்றிட்டத்திலே பணியாற்றுவேன் என உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்”

(முழுமையான ஆதரவுக் கடிதத்தைப்படிக்கஇங்கே அழுத்தவும்).

நகரசபை உறுப்பினர் ஜிம் கரிஜியானிஸ்

22ம் வட்டாரம் ஸ்காபரோ-ஏஜின்கோர்ட்

“ஒரு பல்பண்பாட்டு நகரமென்பதில் பெருமையடையும் தொறொன்ரோ பரந்து பல்வகைப்பட்ட பண்பாடுகளையும் நம்பிக்கைகளையும் அரவணைக்கிறது. தொறொன்ரோவின் சமூக பண்பாட்டுப் பரப்புகளுக்கு வளமூட்டும் ஒவ்வொரு குமுகத்தையும் அடையாளங்கண்டு போற்றுதல் முக்கியமானது. ஒரு புதிய தமிழ் சமூக மையம் எமது நகரத்தின் பல்பண்பாட்டுத் தன்மைக்கு மேலும் வளமூட்டுவதோடு எமது குமுகத்தினர் பலருக்கும் நன்மைபயக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.”

(முழுமையான ஆதரவுக் கடிதத்தைப்படிக்கஇங்கே அழுத்தவும்).

நகரசபை உறுப்பினர் சிந்தியா லாய்

23ம் வட்டாரம் ஸ்காபரோ வடக்கு

“ஒரு தமிழ் சமூக நிலையத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் தொறொன்ரோவின் தமிழ் குமுகத்திலே முன்னெடுக்கப்படும் பணிகளைக் காண்பது உற்சாகமளிக்கிறது. இந்தத் திட்டம் முன்னேற்றமடைந்து செல்கையில் அதன் அடுத்தடுத்த நடவடிக்கைகளிலே உங்களுடனும் குமுகத்துடனும் இணைந்து செயலாற்ற ஆவலாய் உள்ளேன்”

(முழுமையான ஆதரவுக் கடிதத்தைப்படிக்க இங்கே அழுத்தவும்).

நகரசபை உறுப்பினர் ஜெனிஃபர் மக்கெல்வி

25ம் வட்டாரம் ஸ்காபரோ ரூஜ் பார்க்

“தமிழ் கனேடியர்களுக்கென ஒரு சமூக நிலையத்தைக் கட்டியெழுப்புவதற்காக தமிழ் கனேடியர்களும் ஏனைய குமுகத்தினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் பணிகளின் வளர்ச்சி வேகமடைந்து வருவதை நான் உற்சாகத்துடன் கவனித்து வருகிறேன். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற உங்களையும் உங்கள் சகாக்களையும்போலவே நானும் பேரார்வமாக உள்ளேன் என தெரிவிக்க விரும்புகிறேன். இனி வரவுள்ள பணிகளை ஆற்ற நான் உங்களுடன் இணைய விரும்புவதோடு ஸ்காபரோவிலே பண்பாட்டுக்கும் பொழுதுபோக்குக்குமான ஒரு மையத்தை உருவாக்குவது அனைத்து குமுகங்களுக்குமே பெருநன்மையளிப்பதாக அமையும் என நம்புகிறேன்”

(முழுமையான ஆதரவுக் கடிதத்தைப்படிக்க இங்கே அழுத்தவும்).

நகரசபை உறுப்பினர் மைக்கல் தொம்ப்சன்

21ம் வட்டாரம் ஸ்காபரோ மத்தி

“ஸ்காபரோவிலே தமிழ் சமூக நிலையமொன்றை கட்டியெழுப்புவதற்கான வழிபடுத்துக் குழுவின் திட்டத்திற்கு எனது ஆதரவைத் தெரிவிக்க விரும்புகிறேன். எமது சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக தமிழ் குமுகம் விளங்குகிறது. இந்தப் புதிய மையம் இன்னும் பல்லாண்டுகளுக்கு அவர்கள் ஒன்றுகூடுவதற்கும், ஆதரவு வழங்குவதற்கும், கொண்டாடுவதற்குமான ஒரு தளமாக நிச்சயமாக அமையும்”

“தமிழ் கனேடியர்களுக்கென ஒரு சமூக நிலையத்தை உருவாக்குவதைநோக்கி ஒன்றிணைந்து செயற்படும் பேரார்வத்திலும் உற்சாகத்திலும் நாமும் பங்குகொள்வதோடு, தென்கிழக்கு ஸ்காபரோவிலே இத்தகையதொரு மையம் அமைவது இந்த அயலிடத்தின் நல்வாழ்வுக்கு உறுதுணையாயிருக்கும் என நம்புகிறோம். இத்தகையதொரு பாரிய முன்னெடுப்பு அனைத்து அரச மட்டங்களும் குமுகங்களும் ஒன்றிணைந்து செயலாற்றினால் மட்டுமே சாத்தியமாகும் என்பதால் உங்களுடன் இணைந்து அடுத்தடுத்த பணிகளிலே ஈடுபட ஆவலாய் உள்ளோம்”

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி

ஸ்காபரோ - ரூஜ் பார்க்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் யிப்

ஸ்காபரோ – ஏஜின்கோர்ட்

நாடாளுமன்ற உறுப்பினர் சல்மா சாஹிட்

ஸ்காபரோ மத்தி

Mநாடாளுமன்ற உறுப்பினர் ஷோண் சென்

ஸ்காபரோ வடக்கு

மாநில அவை உறுப்பினர் அரிஸ் பபிக்கியன்

ஸ்காபரோ – ஏஜின்கோர்ட்

“தமிழ் சமூக நிலைய செயற்றிட்டத்திற்கு தலைமைவகிப்பவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக்கிட்டியது. இந்தத்திட்டம் தமிழ் குமுகத்திற்கு மட்டுமன்றி ஸ்காபரோவாழ் மக்கள் அனைவருக்குமே முக்கியமானது என நான் உணர்கிறேன். தமிழ் சமூக நிலையமானது ஸ்காபரோவிலும் ஒன்ராறியோவிலும் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடி உறவாடும் ஒரு சமூக பண்பாட்டு வெளியாக மட்டுமே அமையாது. அது எமது குமுகங்களின் சமூக பண்பாட்டுப் பின்னணிகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான சமூகத்தளமாகவும் பல்வேறு சேவைகளை வளங்குவதாகவும் இருக்கும்”

மாநில அவை உறுப்பினர் டொலி பேகம்

ஸ்காபரோ தென்மேற்கு

“பெருமளவிலான தமிழர்கள் வசிக்கும் ஸ்காபரோ தென்மேற்கு பகுதியின் மாநில அவை உறுப்பினர் என்ற வகையிலே, அதிகளவிலான தமிழ் குமுகத்தினரும் ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அணுகிப் பயனுறக்கூடியதாக ஸ்காபரோவிலே உருவாக்கப்படும் இந்தத் திட்டத்தை நான் ஆதரிக்கிறேன். இந்தத் திட்டம் நிறைவேறும்போது இந்த சமூக மையம் தமிழ் குமுகத்தினர்மீதும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மற்றைய குமுகத்தினர் மீதும் வலிமையானதும் நேர்மறையானதுமான தாக்கத்தை ஏற்படுத்தும்”

மாநில அவை உறுப்பினர் ரேமண்ட் சோ

ஸ்காபரோ வடக்கு

“தொறொன்ரோ பெரும்பாகத்திலே வளர்ந்துவரும் தமிழ்க் குமுகம் தமக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் ஊக்கமிக்க புத்தாக்கமுடைய ஒரு வெளியாக தமிழ் சமூக மையம் அமையும். இத்தகையதொரு பாரிய முன்னெடுப்பு தமிழ் கனேடியர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யவென அனைத்து மட்ட அரசுகளும் ஒன்றிணைந்து செயற்பட்டாலன்றி வெற்றியளிக்காது. தமிழ்க் குமுகத்தினருடனான எனது சந்திப்பின்போது தமிழ் முதியோரின் பெருகிவரும்தேவைகளைக் பூர்த்திசெய்வதையும் இந்த நிலையமும் அதன் சூழமைவும் அணுகுவதற்கு இலகுவானதாக அமைவதையும் கருத்திலெடுக்கவேண்டும் என வலியுறுத்தினேன்”

மாநில அவை உறுப்பினர் கிறிஸ்டீனா மிற்றாஸ்

ஸ்காபரோ மத்தி

“எமது நகரிலே தமிழ் கனேடியர்களுக்கென ஒரு சமூக மையம் அமையப்போகும் சாத்தியத்தை எண்ணி நான் உற்சாகமடைவதோடு நம்பிக்கையும் கொண்டுள்ளேன். தமிழ் சமூக நிலையமானது மாநிலம் தழுவிய வகையிலே தமிழர்களை ஒன்றிணைக்கும். தமிழ் சமூக நிலையமானது முதியோருக்கான செயற்பாடுகள், சிறுவர் பராமரிப்பு, விளையாட்டுக்கான செயற்பாடுகளும் வெளிகளும், கலை பண்பாட்டு ஆற்றுகைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும்”

மாநில அவை உறுப்பினர் விஜய் தணிகாசலம்

ஸ்காபரோ - ரூஜ் பார்க்

“வடகிழக்கு ஸ்காபரோவிலே தமிழ் சமூக மையமொன்றை நிறுவுவதை ஆதரிப்பதில் பேருவகையடைகிறேன். தொறொன்ரோ பெரும்பாகத்திலே வளர்ந்துவரும் தமிழ் குமுகம் தமக்கு அவசியம் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் ஊக்கமிக்க புத்தாக்கமுடைய ஒரு வெளியாக தமிழ் சமூக மையம் அமையும். தமிழ் சமூக நிலையமானது மாநிலம் தழுவிய வகையிலே தமிழர்களை ஒன்றிணைக்கும். தமிழ் சமூக நிலையமானது முதியோருக்கான செயற்பாடுகள், சிறுவர் பராமரிப்பு, விளையாட்டுக்கான செயற்பாடுகளும் வெளிகளும், கலை பண்பாட்டு ஆற்றுகைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும்”