இரண்டாங்கட்டக் கலந்தாய்வுகள் - செயற்பாட்டுத் தேவைகளைக் குமுக அமைப்புகளுடன் இணைந்து சீர்படுத்தல்

நவம்பர் 2020லே, தமிழ்க் குமுகத்திற்குப் பண்பாட்டுச் சேவைகளையும் மனிதநலச் சேவைகளையும் வழங்கும் தனிநபர்களையும் குமுக அமைப்புகளையும் குறிவைத்து, தமிழ் சமூக மையம் இரண்டாங்கட்ட இணையவழிக் கலந்தாய்வுக்கான பொறியொன்றை அறிமுகம் செய்தது. முதற்கட்டக் கலந்தாய்வுகளிலே குமுகத்தால் அடையாளங்காட்டப்பட்ட முதன்மைச் செயற்பாடுகளை மேலும் ஆய்வுசெய்து சீர்படுத்துவதே இரண்டாங்கட்டக் கலந்தாய்வின் நோக்கமாகும். இந்தக் கலந்தாய்வானது பரந்துபட்டதுறைகளிலே சேவைகளை வழங்கும் 145 குமுக அமைப்புக்களையும் மனிதநலச் சேவை வழங்குனர்களையும் உள்வாங்கக்கூடியதாய் அமைந்தது. இந்த அறிக்கையானது இந்தக் கலந்தாய்வின் முடிவுகளை எடுத்துக்கூறுகிறது. இவை தமிழ் சமூக மையத்தின் எதிர்கால வடிவமைப்புக்கும் செயற்பாட்டுத் தெரிவுகளுக்கும் ஆதாரமாய் அமையும்.