முதற்கட்டக் கலந்தாய்வுகள் - செயற்றிட்டத்தின் முதன்மையான விடயங்கள்

தமிழ் சமூக மையத்தின் முதன்மையான செயற்பாட்டுத் தேவைகளை நிர்ணயிக்கவென பரந்துபட்ட குமுக அங்கத்தவர்களை அடையாளங்கண்டு அவர்களின் கருத்தறியவென இணையவழிப் பொறியொன்றைத் தமிழ் சமூக மையமானது 2019இலே ஏற்படுத்தியிருந்தது. இதற்கான இணையத்தளத்தில் எமது நோக்கங்களும் கூட்ட அறிக்கைகளும் பகிரங்கப்படுத்தப்படுகின்றன. மேலும் சமூக ஊடகங்களினூடாகவும், துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும், வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை ஊடகங்களினூடாகவும் கூட இத்தகவல்கள் பகிரப்படுவதன் மூலம் பரந்துபட்ட மக்களைச் சென்றடைந்து அவர்களின் கருத்துகளும் உள்வாங்கப்படுவது உறுதி செய்யப்படுகின்றது.

கிடைத்த கருத்துக்கணிப்புகள், பல்வேறு வயது, பால் சார்ந்த பொதுமக்களுடனும், பலதரப்பட்ட சமூக அமைப்புகளுடனுமான நேரடிச் சந்திப்புகள் ஆகியவற்றினூடாகத் திரட்டப்பட்ட பரவலான , தகவல்களின் அடிப்படையில் நிகழ்ச்சி அரங்கம், உடற்பயிற்சிக்கூடம், மனநலச் சேவைகள், வரலாற்று மற்றும் ஆவணக் காட்சியகம், இனப்பேரழிவுக் காட்சியகம், நூலகம், பெண்களுக்கான சேவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள் போன்றவை முக்கிய இடத்தைப் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டமை இந்த முன்னெடுப்புக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

What kind of spaces and programming do you want to see in a Tamil Community Centre?

Data based on 1114 consultations

உரு 8: குமுக கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி செயற்றிட்டங்களுக்கான தேவைகள்

The online consultation tool, as well as in-person public consultations, gathered data from community members as well as community organizations with diverse mandates designed to address various community needs. It helped identify stakeholder priorities and set the parameters for the project. The consultation process was able to reach community members across age and gender ranges (Fig. 9), which made the resulting data more useful and viable.

Consultation by Gender

Consultation by Age

உரு 9. கருத்துக்கணிப்பில் பங்குபற்றியோரின் வயது மற்றும் பால் ரீதியான விபரங்கள்

கருத்துக்கணிப்பில் பங்கெடுத்த பெரும்பாலான மக்கள் (60 விழுக்காடு) இவ்வகையான சேவைகள் அற்ற அல்லது குறைந்த வட-கிழக்கு ஸ்காபரோவில் வாழ்பவர்களாக இருப்பது அவதானிக்கத்தக்கது. இது வருமானம் குறைந்த, சமூகத்தடைகள் பல கொண்ட புதிய குடிவரவாளர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பல நிறைந்த, இவ்வாறான சமூகங்களின் தேவைகளையும், குறைபாடுகளையும் வெளிப்படுத்துகின்ற ஆய்வுகளின் தரவுகளுடனும் ஒத்துப்போகின்றது.

City of Toronto run community centres in the Scarborough area, showing underserved region in Northeast Scarborough.

உரு 4. தொறொன்ரோ நகரசபையினால் நடாத்தப்படும் சமூக நிலையங்களின் இருப்பிடங்களைக் காட்டும் வரைபடம். இது வட-கிழக்கு ஸ்காபரோ பகுதியானது இவ்விடயத்தில் பின்தங்கியுள்ளதைக் காட்டுகின்றது.

City of Toronto run services and programs in the Scarborough area, showing underserved region in Northeast Scarborough.

உரு 5. தொறொன்ரோ நகரசபையினால் நடாத்தப்படும் சமூக நிலையங்களின் இருப்பிடங்களைக் காட்டும் வரைபடம். இது வட-கிழக்கு ஸ்காபரோ பகுதியானது இவ்விடயத்தில் பின்தங்கியுள்ளதைக் காட்டுகின்றது.

தொறொன்ரோ நகரசபையானது ஏப்பிரல் 2018 இல் நகரசபை தமிழ்ச்சமூகத்துடன் சேர்ந்து கூட்டுமுயற்சியாக ஒரு புதிய சமூக மையம் ஒன்றினை உருவாக்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. இக்காலத்தில் இருந்து இந்த வழிப்படுத்து குழுவானது நகர முதல்வரின் அலுவலகத்துடனும், தொறொன்ரோ நகராக்க அமைப்புடனும் இணைந்து தமிழ்ச்சமூக மையத்துக்கான நிலத்தை வருகின்ற 2020 வசந்தகால இறுதிக்குள் பெறுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.